திரைஜாலம்

திரைஜாலம்

சொல் வரிசை – 224

சொல் வரிசை – 224 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. அவன் அவள் அது(— — — — கார்மேகமே இடம் தேடினேன்)

2. தணியாத தாகம்(— — — — யாருக்காக மலர்கின்றாய்)

3. சங்கமம்(— — — மதி கொஞ்சும் நாள் அல்லவா)

4. காதல் கிறுக்கன்(— — — ஒரு பனித்துளி உனக்காக)

5. இரு வல்லவர்கள்(— — — — என் பருவத்தின் மேலென்ன படிப்பு)

6. அன்னை இல்லம்(— — — — விடியும் வரை தூங்குவோம்)

7. இது கதிர்வேலன் காதல்(— — — என்னக் கொண்டுப் போனாளே)

8. வேலைக்காரி(— — நிலை இல்லாதுலகினிலே)

9. தில்(— — — — தீயை தீண்டும் தில் தில்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://www.raagangal.com/index.asp
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்

0
Like
Save

Comments

Write a comment

*