திரைஜாலம்

திரைஜாலம்

சொல் வரிசை – 218

சொல் வரிசை – 218 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. என் தம்பி(— — — தத்தும் கிளியே உன்னை நானறிவேன்)

2. பால்குடம்(— — — — அது கண்குளிர தண்ணொளியை)

3. மாயி(— — — — — வார்த்தை ஒன்று பேசு)

4. கூலிக்காரன்(— — — — நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்)

5. நிறைகுடம்(— — — — — விழியே நீ கண்ட நிழல் நானே)

6. ஆளப்பிறந்தவன்(— — — காலம் குடிசைக்கு பொறக்குதடா)

6. ஆட்டோ ராஜா(— — — எதனால் என் மீது கோபம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://www.raagangal.com/index.asp
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்

0
Like
Save

Comments

Write a comment

*