ஏ.ஐ முன்னோடி போல்யாவைத்தெரியுமா?

ஏ.ஐ முன்னோடி போல்யாவைத்தெரியுமா?

2407PMS_08_ஜார்ஜ் போல்யாவை உங்களுக்குத்தெரியுமா? எனக்கும் இதற்கு முன் தெரியாது. தினமலர் பட்டம் மாணவர் சிறப்பு பதிப்பிற்காக எழுதும் ஏ.ஐ தொடருக்காக, செயற்கை நுண்ணறவின் வரலாற்றுச்சுவடுகளை தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமான மேதைகளில் போல்யாவும் ஒருவர்.

போல்யா, ஹங்கேரி அமெரிக்க கணிதவியல் மேதை என்கிறது விக்கிபீடியா. ஆனால் தர்கம் சார்ந்த சிந்தனையே அவரது கோட்டையாக இருந்திருக்கிறது. லாஜிக் எனப்படும் தர்கம் சார்ந்து அவர் முன்வைத்த கணிதவியல் கோட்பாடுகளும், வழிகளும் இயந்திரங்களை சிந்திக்க வைப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக போல்யா, எழுதிய ஹவ் டு சால்வ் இட் எனும் புத்தகம், இத்துறைக்கான பாலபாடமாக இருக்கிறது,. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பதற்கான அறிவியல் பூர்வ வழியை போல்யா இந்த புத்தகத்தில் விவரித்திருக்கிறார். இந்த வழிகள், எவருக்கும், எந்த பிரச்சனைக்கும் பொருந்தும்.

இந்த வழிகளே இயந்திரங்களை புத்திசாலிகளாக்கும் செயற்கை நுண்ணறிவு ஆய்விலும் அடிப்படையாக அமைகிறது. மேலும் போல்யா, தொடக்க பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரும் விதம் பற்றியும் ஆசிரியர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்.

0
Like
Save

Comments

Write a comment

*