இந்தியாவில் உடல் பருமனும் ஊட்டச் சத்துக் குறைபாடும் !

இந்தியாவில் உடல் பருமனும் ஊட்டச் சத்துக் குறைபாடும் !

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் வயது வந்தோர்களில் பருமனானவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை கூறுகிறது.

அதாவது கடந்த 2012-ம் ஆண்டில் 2.41 கோடியாக இருந்த பருமனானவர்களின் எண்ணிக்கை, 2016-ம் ஆண்டில் 3.28 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளில் நான்கில் ஒரு பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் இது 12 ஆண்டுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, அது நான்கே ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 2004-06-ம் ஆண்டில் 25.39 கோடியாக இருந்த ஊட்டச் சத்துக் குறைபாடுள்ளோரின் எண்ணிக்கை 2016-18-ல் 19.44 கோடியாக குறைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் இந்தப் புதிய அறிக்கை கூறுகிறது.

0
Like
Save

Comments

Write a comment

*