ரஃபேலும் 2ஜி யும்…

ரஃபேலும் 2ஜி யும்…

ரஃபேல் மோசடி பற்றிய ஊடகச் செய்திகளை கவனிக்கும்போது ஒன்று தெரிகிறது. இதுவரை எந்த பிரதான ஊடகங்களும் ரஃபேல் ஊழல் என்று சொல்லவில்லை. மாறாக ரபேல் விவகாரம் , சர்ச்சை , issue என்று தான் வெளியிடுகிறார்கள்.
இதுவொன்றும் தவறில்லை .
ஊழல் என்று உறுதிப்படுத்தப்படாத வரையில் ஊழல் என்று அடையாளப்படுத்த வேண்டியதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் இதே ஊடகங்கள் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் வார்த்தைக்கு வார்த்தை 2G ஊழல், 1.76லட்சம் கோடி ஊழல் என்று எழுதினார்கள்.

ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் என்பதை கூட மறந்து ஒரு டிவியில் ஆ.ராசா வை கோர்ட் கூண்டு போன்ற செட் போட்டு அதில் நிற்கவைத்து விவாதம் செய்தார்கள்.
ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி 2G ஊழல் பற்றி கேள்விப்படும்போது தனக்கு தலை சுற்றி மயக்கம் வருவதாக நீதிமன்றத்தில் வைத்தே கமென்ட் அடித்தார். ஒ
ரு திருடனை நடத்துவது போலவே அன்று அத்தனை ஊடகங்களும் ராசா வை நடத்தினார்கள்.

2ஜி ஊழல் என்று ஆரம்பநாள் முதல் முதற்பக்கத்தில் 8 கால செய்தியாக வெளியிட்டு திமுகவையும் ஆ .ராசா,கனிமொழியை அசிங்கப்படுத்திய தேசிய ஊடகங்கள் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ள மோடி-அம்பானி ரபேல் விமான ஊழலை பற்றி போதிய அளவில் செய்தி வெளியிடவே இல்லை.
2ஜி முறைகேட்டை நடக்கவில்லை என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டபின்னரும் திமுகவைத்தாக்க அதையே பயன்படுத்தும் தேசிய,தமிழக ஊடகங்கள் ,பிரியாணி கடையில் நடந்த சண்டையை மற்றும் தனிப்பட்ட விரோதத்தால் நடக்கும் சண்டைகளையும் கூட ஏதோ திமுகவின் தலைமை செய்தது போல் கூட்டமாக விவாதித்த தொலைக்காட்சிகள் ,மின்னணு ஊடகங்கள் இப்போது வாயையும் ,அதையும் பொத்திக்கொண்டிருப்பது ஏன்?
தங்களுக்கு படியாளப்பது நின்றுவிடும் என்ற பயமா?அல்லது மோடியை வெளியே தெரியாமல் அனைத்து ஊடக நிர்வாகிகளும்,ஆசிரியர்களும் சந்தித்த போது நடந்த திரைமறைவு ஒப்பந்தத்தின் வெளிப்பாடா?

1
Like
Save

Comments

Write a comment

*