சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி

பச்சை மருந்து,,,,

ரயில்வே பாலத்திற்கு கீழ் இருக்கும் ஆஸ்பத்திரியில்தான் யவனா அக்கா வின் கணவரை சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள், அவரது உடம்புக்கு என்ன நோய் ,என்ன திடீரென்று ஆஸ்பத்திரியில் சேர்க்கிற அளவிற்கு என அந்தத் தெருக்காரர்கள் எல்லோரும் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள்,

என்ன வந்துறப்போகுது அவரு ஒடம்புக்குன்னு பெரிசா,,,?அட போங்கப்பா, நீங்க வாட்டுக்குப்போயி அவுங்கவுங்க வேலையப்பாருங்க,ரெண்டு நாளை யில அவன் வாட்டுக்கு ஆஸ்பத்திரியில இருந்து நடந்தே வீட்டுக்கு வந்துரு வான் எனச்சொன்ன அடுத்த தெருக்காரர் அவரது நடை பயிற்சியில் கூட்டாளி,

வெயிலோ,மழையோ,காற்றோ,பனியோ,,,,எதுவாயிருந்தாலும்அவர்களது நடை பயிற்சி நின்று இவன் கேள்விப்பட்டதே இல்லை,அப்படி நிற்க வேண்டுமா னால் சிறப்புக்காவல் படை வந்து தடுத்து நிறுத்தினால்தான் உண்டு,அப்பொ ழுது கூட நிற்பார்களா என்பது சந்தேகமே/

அந்தளவிற்கு நடையின் மீது அவர்களுக்கு ஆர்வம் என்றில்லை என்ற போ தும் கூட வயதில் மூத்தவர்களாகவும் மனம் ஒத்த ஒற்றை அலையுடனும் பெரிதாய் எதுவும் கருத்து முரண்பாடுகளில் சிக்கிக்கொள்ளாமலிருந்த அவர் கள்ஐந்து பேருமாய் நடை பயிற்சிக்கு கிளம்பி விடுவார்கள் தினசரி காலை யிலும் மாலையிலுமாக.

அவர்கள் அப்படி கிளம்பும் முன்பாய் சந்தித்துக்கொள்கிற இடமாய் டிப்போ அருகில் இருக்கும் டீக்கடையை வைத்திருந்தார்கள்,

டீக்கடைக்காரர்இவர்கள்ஐவரையும்பார்த்தவுடன் டீ போட்டுவிடுவான், டீதான் வேணாமுன்னு சொன்னேன்ல என அந்த ஐவரில் வழக்கமாய் பிகுப்பண்ணிக் கொள்கிற அவரிடம் சும்மாக்குடிங்க சார் ,நான் ஒண்ணும் ஒங்ககிட்ட குடிச்ச டீக்கு ஒடனே காசு வேணுமுன்னு கேக்க மாட்டேன், நீங்க எப்ப விரும்புறீங் களே அப்பக்குடுத்தாப் போதும்,இல்லை குடுக்காட்டிக்கூடயும் பரவாயில்ல, நான் ஒங்க கிட்ட அத எப்பிடி வாங்கணுமோ வாங்கிக்கிறேன் என்பான்,

எப்பிடி வாங்குவ நான் குடுக்காம போடா போடா போக்கத்த பையலே,,, என் பார் சிரித்துக்கொண்டே ,என்ன சார் இவ்வளவு சகஜமா அவன் கிட்ட வாதா டுறீங்க,அவன் என்ன ஒங்களுக்கு சொந்தமா எனக்கேட்கும் போது இல்லை சார் சொந்தமில்லாத சொந்தம் அவன்.கிட்டத்தட்ட ஏங் புள்ளையப்போல அவன் என்பார்.

ஏங் வீட்டுல இருந்து நாலாவது வீட்டுலதான் குடியிருக்கான்.

நான் பெரிய வீட்டுக்காரன் அவன் சாதாரணடீக்கடைக்காரங்குற ஏற்ற தாழ் வான பார்வை அவன்கிட்ட எப்பயும் இருந்துக்கிட்டே இருக்கும், நான் அது போல அவனை நெனைக்கிறேனோ இல்லையோ அவன் அந்த மாதிரி நெனைச்சிக்கிட்டு ஒரு தூரத்த வைச்சிக்கிட்டே இருப்பான்,

நானும்அவன்கிட்ட நெருங்குறதுக்கு ரொம்பமுயற்சி பண்ணிப்பாத்துதோத்துக் கூடப்போயிட்டேன்,தலையால தண்ணி குடிச்சும் கூட அவன ஈர்க்க என்னால முடியல.

அவனா நெருங்கி வந்தான் ஒரு நாளன்னைக்கி,என்னடா இது என்னைக்கும் இல்லாத திருநாளா இப்பிடி வர்றானேன்னு பாத்தா நேரா ஏங்வீட்டு வேப்ப மரத்த குறிவச்சவனா வந்துகிட்டு இருக்கான்,

வந்தவன் நேரா ஏங்கிட்ட வந்து மொகத்தக்கூட நிமிந்து பாக்காம சார் நான் வாங்கீருக்குறஆட்டுக்குட்டிக்குபசியாத்தகொஞ்சம்வேப்பங்கொழை வேணும் னான்.

சரிஅத கேக்க ஏண்டா இவ்வளவுதயங்குற,ஒடிச்சிட்டுப்போ,வேப்பங்கொழை இல்ல வேப்ப மரத்துல பாதியக்கூட வெட்டிக்கொண்டு போ,ஆனா ஒரு சின்ன கண்டிசன். அந்த ஆட்டுக்குட்டிய மட்டும் ஏங் கண்ணுல காட்டு போதும்ன்னு நான் சொன்னத கேட்டவன் மல மளன்னு மரத்துல ஏறி கைக்கு பக்கத்துல இருக்குற கொப்புகள்லயிருந்து வேப்பகொழைகளப்பறிச்சவன் பறிச்ச கொழை கள மரத்துக்கு கீழயே போட்டுட்டு போயி ஆட்டுக்குட்டிய கூப்புட்டுக்கிட்டு வந்தான்,எனக்கும் அவனுக்கும் ஊடால ஒரு பாலமா இருந்து எங்க ரெண்டு பேரையும் யெணைச்சி வச்சது அந்த ஆட்டுக்குட்டிதான்,அது இல்லைன்னா இந்நேரம் அவன் அவன் தெசையில நான் ஏங் தெசையிலன்னு இருப்போம் அவுங்கவுங்க வேலைப்பாத்துக்கிட்டு என்பார்,

அப்படி வெதைப்போட்ட ஒறவுதான் இப்ப இவ்வளவுதூரம் அவனையும் என்னையும் கயிறு போட்டு கட்டி வச்சிருக்கு,அந்த கயித்துல இருந்து வர்ற பேச்சுகதான் இத்தனையும் என்பார் கூடவே ,,/

ஏங் நண்பனுக்கு ஒண்ணும் ஆகாது ,அவனுக்கு ஒடம்புல பெரிசா ஒண்ணும் வியாதியெல்லாம் இல்ல,கொஞ்சம் சுகர் இருக்கு அவ்வளவுதான்,

அதக்கொறக்கத்தான் நடையா நடக்குறான் பாவம் கெடந்து,என்ன நடந்து என்ன செய்ய,இருக்குறது அப்பிடியேதான் இருக்கு, கொறையவா போகுது, இருந்தாலும் ஒரு நப்பாசையில நடக்குறான்,வேண்டாம் ஒரு அளவுக்கு மேல நடைன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்,

இப்பிடித்தான் போன மாசத்துல ஒரு நாளையில வாக்கிங்க் போயிட்டு வரும் போது ஆர்வக்கோளாறு ஏற்பட்டவன் போல நீங்களெல்லாம் வீட்டுக்குப் போ ங்க, நான் இன்னும் கொஞ்ச தூரம் போயிட்டு வர்றேன்னு போனவன் போன யெடத்துல தளர்ச்சியும் அயர்ச்சியும் தாங்காம கண்ணக்கட்டிக்கிட்டு வர மயங்கி விழுந்துட்டான்,

நல்லவேளை அந்த வழியில் போய்க்கிட்டு இருந்த ஒருத்தன் இவர் மொகத் துல தண்ணியடிச்சி எழுப்பி கூட்டிக்கிட்டு வந்துருக்கான்.

அது போல ஆர்வக்கோளாறுல ஏதாவது பண்ணீருவான்,அப்புறமாப்போட்டு முழிப்பான்.இதுதான் அவன் அன்றாடம் பாத்துக்கங்க,

இப்பக்கூட நாங்களெல்லாம் வேணாம் வேணாமுன்னு சொல்லச்சொல்ல சிகரெட்ட ஊதி ஊதி தள்ளுனதுக்கு கைமேல் பழனா இப்ப ஆஸ்பத்திரிக்கு போயி கெடக்கான் என்பார்,

”நேத்து சாய்ங்காலம் ஏங்கூட வாக்கிங் வந்தானே”,

காலையில் டிப்போவில் பால் வாங்கிக்கொண்டிருக்கும் போது சொன்னார் அவரது வாக்கிங் பிரண்ட்/

ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி சிகரெட்குடிச்சானாம்,அவன் வீட்டம்மா வும் அவன்கிட்டகால்லவிழுந்துகேக்காத கொறையாவும் பேசுற விதமாவும் பேசிப் பாத்துட்டாங்களாம்,அவனும் சிகரெட் பிடிக்குறத விடுறது போல இல்லையாம்,

“அந்த சனியன் பிடிச்ச கருமத்த எந் நேரமும் வெரலிடுக்குல சொருகிக்கிட்டே திரியாட்டி என்னாவாம்,கழுதை கொஞ்சம் அங்கிட்டு தூக்கிப்போட்டா என்ன செய்யுதுங்குற வீட்டம்மா பேச்ச கேக்கவே மாட்டாரு,அந்தம்மாவுக்கு என்ன வருத்தம்ன்னாஅவருக்குஒடம்புக்குஏதாவதுஒண்ணு ஆகிப்போகுமோ,அப்பிடி ஆகிப்போனா நம்மதான தூக்கிச் சொமக்கணுமுன்னு வருத்தம்.

”ராத்திரி சிகரெட்டுப்புடிக்கிறதுக்கு முன்னாடி சப்புட்டுருக்கான், பொங்கலோ, தோசையோன்னு சொன்னாங்க,ஆங் பொங்கலுதான்,பச்சரி சாதம், கூடவே, பாசிப பருப்பு முந்திரி,கிஸ் முஸ்ஸீன்னு சேர்மானம் வேற,ரொம்ப நாள் கழிச்சி பொங்கல் சமைச்சதால இன்னும் கொஞ்சம் வையி,இன்னும் கொஞ் சம்வையின்னுகேட்டு வாங்கி சாப்புட்டுருக்கான்,

“நெறைஞ்சி இருந்த வயிறோட போயி சிகரெட்டக் குடிச்சிருக்கான், சாப்புடுற துக்கு முன்னாடி அப்பத்தான் ஒரு சிகரெட்ட வேற குடிச்சிருக்கான், அப்புறம் சாப்புட்டு முடிச்ச கையோட சிகரெட்ட குடிக்கவும் ஒரு மாதிரியா ஆயிப் போயிருக்கு ஒடம்புக்கு,இது போலான நேரங்கள்ல வந்து படுத்துருவா னாம், படுத்தகொஞ்சநேரத்துலசரியாப்போகுமாம் ஒடம்புக்கு,ஆனா அன்னைக்கி எவ்வளவோ நேரம் கழிச்சும் சரியாகலையாம்.ரொம்ப அவஸ்தப் பட்டுக்கிட்டே இருந்துருக்கான்,

தூங்கிப்போன அவன் வீட்டம்மா தற்செயலா பாத்ரூம் போறதுக்காக எந்திரி ச்சவுங்க இவன் படுற அவஸ்தையப் பாத்துட்டு ஆஸ்பத்திரிக்கு போவோ ம்ன்னுசொன்னப்பக்கூடஇல்லைபாத்துக்கிருவம்சரியாயிரும்ன்னுதான்சொல்லீருக்கான்,ஆனா அவன் சொன்ன நேரத்துல இருந்து நேரம் ஆக ஆக அவனு க்கு ஒடம்பு தொந்தரவு கூடிருக்குதே ஒழிய கொறையக்காணோம், சரின்னு அப்பிடியே ஆஸ்பத்திரிக்கு தூக்கீட்டு போயிருக்காங்க ,புள்ளைங்கள பக்கத்து வீட்டுல விட்டுட்டு/

ராத்திரிக்குகௌவர்மெண்ட் ஆஸ்பத்திரியில காட்டீட்டு காலையில கொண்டு போயி பாலத்துக்கு கீழ இருக்குற தனியாரு ஆஸ்பத்திரியில சேத்துருக்காங்க என்றார்,

யவனாக்கா பாக்குறதுக்கு கொஞ்சம் அழகாகவும் பூசுனாபுலயும் இருக்கு ற தால அவளுக்கு அந்தப்பெயர் பொருத்தந்தான் என்பார்கள் தெருவில்/

இலை விட்டு பூத்து காய்த்த மரம் மண் பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளை த்து நிலைத்து தன் ஆகுருதி காட்டி இலையும் பூவும் பிஞ்சும் காயும் கனியு மாய் நிற்பது போல் நின்றாள் தன் நிலை காட்டி/

யவனாக்காவிற்கு சினிமா பாடல்கள் என்றால் உயிர்,வீட்டில் ஏதாவது பாட்டைமுனகிக்கொண்டேதான் இருப்பாள், அவளது கணவன் கூட வைவது ண்டு ஏன் இப்பிடி வீட்டுக்குள்ள பஜனை பாடுறது போல எந்நேரமும் பாட்டுப் பாடிக்கிட்டே திரியிற,அப்பிடி பாடணுமுன்னு ஆசை இருந்தா தனியா ஒரு நேரம் ஒதுக்கி பாடி முடிச்சிட்டு வந்து வேலையப்பாரு என்கிற கணவனின் சொல்லுக்கு பதில் சொல்லாக நீங்க மட்டும் செல்போன் கொள்ளாத அளவுக்கு பாட்டா நெறைச்சி வச்சிருக்குறீங்க, அதுவும் ஒங்க வயசுக்குத் தகுந்தது போலயா வச்சிருக்குறீங்க,என்னமோ வயசுப்பசங்க போல வெறும் காதல் பாட்டாவுல்ல வச்சிருக்கீங்க,என்பாள்,

”வயசுக்கும் காதல் பாட்டுக்கேக்குறதுக்கும் என்ன சம்பந்தம் சொல்லு,,,” என் பார் யவனாக்காவின் கணவர்,

நீ மட்டும் ஓங்வயசுக்குத்தகுந்தாப்புலயா சேலைகள கட்டிக்கிற,,,?என்னமோ இப்பத்தான் கல்யாணம் ஆன புதுப் பொண்ணு போலயில்ல உடுத்திக்கிட்டுத் திரியிற,,,என மாறி மாறி ஒருவரை ஒருவர் பரஸ்பரமாய் சொல்லிக்கொள்கிற சமயங்களின் ஏதாவது ஒரு நாட்களில் ஜீன்ஸ் பேண்ட டீ சர்ட்டுடன் யவனா க்காவின் கணவரும் சுடிதார் பளபளக்கிற சேலையுடன் யவனாக்காவுமாய் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு அவரது செல் போனில் பாட்டைப் போட்டு கேட்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

தோளுக்குமேல் வளர்ந்து நிற்கிற பிள்ளைகள் இருவரும் தலையில் அடித்துக் கொண்டு சிரித்துக்கொள்வார்கள்.ஒங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா என்பது போல,/

பரஸ்பரம் அதுபோலான ரசிப்பும் வாழ்க்கை தேட்டங்களும் அவர்களிடம் நிறைந்து குடி கொண்டிருந்த நாட்களின் நகர்வொன்றில்தான் யவனாக்காவின் கணவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள்.

8
Like
Save
  • Tags: -

Comments

Write a comment

*